ETV Bharat / bharat

ட்ரோன் விவகாரம்: காங்கிரஸ் எம்.பி.க்கு பிணை மறுப்பு

author img

By

Published : Mar 12, 2020, 9:04 AM IST

ஹைதராபாத்: தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமா ராவுக்கு சொந்தமான பண்ணை வீடு மற்றும் கட்டடங்களில் ட்ரோனை (ஆளில்லாத சிறிய ரக குட்டி விமானம்) பறக்கச் செய்து படம் பிடித்து உளவு பார்க்கப்பட்டது.

Drone case  Cong MP Revanth Reddy  ட்ரோன் விவகாரம்: காங்கிரஸ் எம்.பி.க்கு பிணை மறுப்பு  ரேவந்த் ரெட்டி, கே.டி. ராமா ராவ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ட்ரோன் விவகாரம்  Drone case: Cong MP Revanth Reddy's bail petition dismissed
Drone case Cong MP Revanth Reddy ட்ரோன் விவகாரம்: காங்கிரஸ் எம்.பி.க்கு பிணை மறுப்பு ரேவந்த் ரெட்டி, கே.டி. ராமா ராவ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ட்ரோன் விவகாரம் Drone case: Cong MP Revanth Reddy's bail petition dismissed

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ட்ரோனை இயக்கியவர் உள்ளிட்ட ஆறு பேரை கைதுசெய்தனர். இந்த விவகாரத்தில் மால்கஜ்கிரி மக்களவை காங்கிரஸ் எம்.பி. ரேவந்த் ரெட்டிக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை விசாரிக்க காவல்துறையினர் மும்முரம் காட்டினர். இந்நிலையில் ரேவந்த் ரெட்டியை காவல்துறையினர் கடந்த 5ஆம் தேதி கைதுசெய்தனர். அவர் மீது பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மற்ற ஆறு பேரும் கடந்த 7ஆம் தேதியிலிருந்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரேவந்த் ரெட்டி நீதிமன்றத்தில் பிணை (ஜாமீன்) வேண்டி விண்ணப்பித்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, ரேவந்த் ரெட்டியின் பிணை மனுவை தள்ளுபடி செய்தார். ரேவந்த் ரெட்டி தனது பிணை மனுவில், தனக்கும் இப்பிரச்னைக்கும் தொடர்பில்லை என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க: சரத்பவார் போல் செயல்பட்டு ஆட்சி கவிழ்ப்பை தவிர்ப்பாரா கமல்நாத்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.