ETV Bharat / bharat

தொடர் விபத்துகள்: போயிங் 737 ரக விமானங்களை ஆய்வுசெய்ய உத்தரவு!

author img

By

Published : Jul 25, 2020, 5:52 PM IST

டெல்லி: போயிங் 737 ரக விமானங்களை ஆய்வு செய்யுமாறு ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரெஸ் ஆகிய நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DHCA) உத்தரவிட்டுள்ளது.

Spicejet
Spicejet

அண்மைக் காலங்களில் போயிங் ரக விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகின. இதையடுத்து, அமெரிக்க விமானப் போக்குவரத்து துறை போயிங் ரக விமானங்கள் அனைத்தையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தியது.

இதையடுத்து, இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான (DHCA) டி.ஜி.சி.ஏ., இந்தியாவில் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரெஸ் ஆகிய நிறுவனங்களின் போயிங் ரக விமானங்களின் தரம், செயல்பாடுகளை ஆய்வுசெய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 82 போயிங் விமானங்களையும், விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரெஸ் தலா 25 போயிங் ரக விமானங்களையும் வைத்துள்ளன. இவற்றின் அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிறப்பு ரயில்களுக்காக ரூ.2,142 கோடி செலவழித்த இந்தியன் ரயில்வே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.