ETV Bharat / bharat

பெண்களுக்கு எதிரான வன்முறை: உத்தரப் பிரதேசம் முதலிடம்!

author img

By

Published : Oct 22, 2019, 8:54 PM IST

டெல்லி: பெண்களுக்கு எதிரான வன்முறையில் உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Violence against women

குற்றங்கள், அது குறித்து பதிவாகும் வழக்குகள் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து நாடு முழுவதும் 3.5 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் அதிகம்.

கொலை, பாலியல் வன்கொடுமை, வரதட்சணை, தற்கொலைக்கு தூண்டுதல், திராவக வீச்சு, கடத்தல் எனப்பல பிரிவுகள் பிரிக்கப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக வன்முறையில் உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் - 56,011 வழக்குகள்
மகாராஷ்டிரா - 31,979 வழக்குகள்
மேற்குவங்கம் - 30,992 வழக்குகள்
மத்தியப் பிரதேசம் - 29,778 வழக்குகள்
ராஜஸ்தான் - 25,993 வழக்குகள்

ஆனால், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பெண்களுக்கு எதிரான வன்முறை டெல்லியில் குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் 2017ஆம் ஆண்டு 13,076 வழக்குகளும் 2016ஆம் ஆண்டு 15,310 வழக்குகளும் 2015ஆம் ஆண்டு 17,222 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: கும்பல் வன்முறையில் அலட்சியம் காட்டும் மத்திய அரசு?

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.