ETV Bharat / bharat

நாட்டில் 31 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

author img

By

Published : Aug 24, 2020, 2:13 PM IST

டெல்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 61 ஆயிரத்து 408 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்தைத் தாண்டியது.

இந்தியளவில் கரோனா பாதிப்பு
இந்தியளவில் கரோனா பாதிப்பு

உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த தகவல் பின்வருமாறு:

கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61 ஆயிரத்து 408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்து 06 ஆயிரத்து 349 ஆக கடந்துள்ளது.

கரோனா பாதிப்பால் நேற்று ஒரேநாளில் 836 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 57 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது. கரோனா உயிரிழப்பு விகிதம் 1.86 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 38 ஆயிரத்து 036 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைந்தோரின் விகிதம் 75.27 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 7 லட்சத்து 10 ஆயிரம் 771 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

கரோனா தினசரி எண்ணிக்கையானது கடந்த 18 நாள்களாக 20 லட்சத்திற்கும் அதிகமாகப் பாதிப்பு பதிவாகிவருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் மூன்று கோடிக்கு அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதுவரை ஆறு லட்சத்து 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் நேற்றைய தினம் கரோனாவால் புதிதாக ஐந்தாயிரத்து 975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது மூன்று லட்சத்து 79 ஆயிரத்து 385 பேர் பாதிக்கப்பட்டு இரண்டாமிடத்திலும் நீடிக்கின்றன. மூன்றாவது இடத்திலும் உள்ள ஆந்திரப் பிரதேசத்தில் மூன்று லட்சத்து 53 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 20 நாள்களாகத் தினமும் 50,000-க்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் 2.35 கோடி பேர் நோய்த்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 8.12 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா முதலில் உள்ளது. இரண்டாவதாகப் பிரேசில் அடுத்தபடியாக இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் குறைந்தளவே இறப்பு விகிதங்கள் இருந்தாலும், இந்த நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: 'இறப்பு விகிதத்தை குறைக்க அரசு முயற்சிக்கிறது' - டெல்லி சுகாதார அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.