ETV Bharat / bharat

கருணாநிதிக்கு சிலை: முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

author img

By

Published : Oct 28, 2020, 11:08 PM IST

புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைப்பது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தின் நான்காவது மாடியில் உள்ள கூட்ட அரங்கத்தில், கருணாநிதியின் திருஉருவ சிலை அமைப்புக் கமிட்டியின் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி, வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன், துணை சபாநாயகர் எம்.என்.ஆர். பாலன், தொகுதியின் திமுக எம்எல்ஏ ஆர். சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் தேவ பொழிலன், பொதுப்பணித் துறை அலுவலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு சிலை அமைப்பது குறித்தும் அச்சிலை வைப்பதற்கான இடங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சிலையை அமைப்பதற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன்.

இதையும் படிங்க: பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.