ETV Bharat / bharat

நீட் தேர்வு கட்டாயம் இல்லை - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதி

author img

By

Published : Apr 2, 2019, 1:09 PM IST

Updated : Apr 2, 2019, 1:31 PM IST

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோா் வெளியிட்டனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி, ஆளும் பாஜக கட்சிக்கு எதிராக அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பரப்புரையில், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தினருக்கு மாதம் ரூ.6000 வழங்க கூடிய குறைந்தபட்ச உறுதி தொகை திட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டது.

இந்த தேர்தல் அறிக்கை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.

இதையடுத்து தேர்தல் அறிக்கை குறித்து பேசிய ராகுல் காந்தி, ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கிவிட்டோம் என்றும், அனைத்து தரப்பினரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் குறித்து ராகுல் காந்தி கூறுகையில்,

  • 'நியாய்' எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும்.
  • 'நியாய்' திட்டத்தால் நாட்டிலுள்ள 20 விழுக்காடு ஏழைக் குடும்பங்கள் பயனடையும்.
  • பணமதிப்பிழப்பு திட்டத்தின் பாதிப்புகளை சரிசெய்யும் வகையில்'நியாய்' திட்டம் இருக்கும்.
  • கிராம ஊராட்சிகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
  • மத்திய அரசின் பல்வேறு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்படும்.
  • புதிய தொழில் தொடங்க மூன்று ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் பெற தேவையில்லை.
  • 2030ஆம் ஆண்டிற்குள் நாட்டிலிருந்து வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும்
  • பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
  • விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
  • 2022ஆம் ஆண்டிற்குள் 25 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
  • அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நீட் தேர்வை மாநிலங்கள் விரும்பாவிட்டால் அவர்கள் தனியாக தேர்வு வைத்துகொள்ளலாம்.
Intro:Body:

body


Conclusion:
Last Updated : Apr 2, 2019, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.