ETV Bharat / bharat

தயாரான காங்கிரஸின் இடைத்தேர்தல் பட்டியல் - சூடு பிடிக்கும் ம.பி. தேர்தல் களம்?

author img

By

Published : Sep 11, 2020, 6:16 PM IST

போபால்: மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ள 15 வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

தயாரான காங்கிரஸின் இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் - சூடு பிடிக்கும் தேர்தல் ம.பி., களம் ?
தயாரான காங்கிரஸின் இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் - சூடு பிடிக்கும் தேர்தல் ம.பி., களம் ?

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த எம்எல்ஏக்கள் 27 பேர் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தனர். கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த 27 பேரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, காலியான அந்த 27 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர்-நவம்பரில் நடைபெறும் என என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவிய மத்தியப்பிரதேசத்தின் அரசியல் ஆளுமைகளுள் ஒருவரான ஜோதிராதித்யா மாதவராவ் சிந்தியாவை வீழ்த்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிரடி திட்டங்களோடு களமிறங்கி உள்ளது.

அந்த வகையில், நடைவெறவிருக்கும் அந்த 27 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் முதல்கட்டமாக 15 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

ஜோதிராதித்யா சிந்தியாவின் கோட்டையாக கருதப்படும் குவாலியரில் சுனில் சர்மா களமிறக்கப்பட்டுள்ளார்.

சன்வேரைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரேம்சந்த் குடுவ், சுரேஷ் ராஜேவ் ஆகியோரது பெயர்கள் வேட்பாளர் தேர்வின் முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரசில் 89 எம்.எல்.ஏக்களும், பாஜக 107 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

ஆளும் கட்சியின் பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க 27 இடங்களையும் வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.