ETV Bharat / bharat

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் நடத்திய டெங்கு கொசு ஒழிப்பு கள ஆய்வுப் பணி!

author img

By

Published : Oct 9, 2019, 1:06 PM IST

புதுச்சேரி: மாவட்ட ஆட்சியர் நடத்திய டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் இடங்களை கண்டறிந்து அதனை அழிக்கும் கள ஆய்வுப் பணி நடைபெற்றது.

கள ஆய்வுப் பணி நடத்திய மாவட்ட ஆட்சியர்.


புதுச்சேரி மாநிலம் குமரகுரு பள்ளம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதாரத்துறையின் தேசிய கொசு, பூச்சிகளால் பரவும் நோய்த்தடுப்புப் பிரிவின் சார்பாக டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் இடங்கள் கண்டறிந்து அதனை அழிக்கும் கள ஆய்வுப் பணி இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையில் சுகாதார துறை இயக்குனர் மோகன் குமார், அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் வாசுதேவன் உள்ளிட்ட அலுவலர்கள் குமரகுரு பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கொசு உற்பத்திக்கு காரணமான பொருட்களை கண்டறிந்து அதனை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவிட்டார்.

கள ஆய்வுப் பணி நடத்திய மாவட்ட ஆட்சியர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் நடத்திய டெங்கு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அருண் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். மேலும், பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தி ஆகக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. டெங்கு நோய் அற்ற மாநிலமாக மாற்ற புதுவை சுகாதாரத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு விழிப்புணர்வு பேரணியின்போது அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க : ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘எமதர்மராஜா’!

Intro:புதுச்சேரியில் டெங்கு நோய் விழிப்புணர்வு மற்றும் சுகாதாரக் குழு தலைமையில் மாவட்ட ஆட்சியர் நகர்ப் பகுதியில் டெங்கு கொசுக்கள் கண்டறிந்து அழிக்கும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்


Body:டெங்கு நோய் விழிப்புணர்வு குறித்த பேரணி மற்றும் டெங்கு கொசுக்கள் கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கையில் மாநில நிர்வாகம் இறங்கியுள்ளது இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் குமரகுரு பள்ளம் புதிய ஒதியம் சாலை பகுதி உள்ளிட்ட சுற்றுப்புறத்தில் சுகாதார துறையின் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு பிரிவின் சார்பாக டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் இடங்கள் கண்டறிந்து அழிக்கும் கள ஆய்வு பணி இன்று நடைபெற்றது

இதில் மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையில் சுகாதார துறை இயக்குனர் மோகன் குமார் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் வாசுதேவன் ஆகியோர் குமரகுரு பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர் அங்கு கொசு உற்பத்தி செய்யும் பகுதிகளை கண்டறிந்து அங்குள்ள பழைய டயர்கள் கொசு உற்பத்தி காரணம் ஆன பொருட்களை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவிட்டார்

இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற பள்ளி மாணவர்கள் நடத்திய டெங்கு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அருண் கொடியசைத்து துவக்கி வைத்தார் மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டிலுள்ள மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தி ஆகக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டது டெங்கு நோய் அற்ற மாநிலமாக மாற்ற புதுவை சுகாதார துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அங்கு விழிப்புணர்வு பேரணி போது அறிவுறுத்தப்பட்டது


Conclusion:புதுச்சேரியில் டெங்கு நோய் விழிப்புணர்வு மற்றும் சுகாதாரக் குழு தலைமையில் மாவட்ட ஆட்சியர் நகர்ப் பகுதியில் டெங்கு கொசுக்கள் கண்டறிந்து அழிக்கும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.