ETV Bharat / bharat

சீனா கடுமையாக உழைக்கிறது - டொனால்ட் ட்ரம்ப்

author img

By

Published : Feb 25, 2020, 5:40 PM IST

டெல்லி: கொரோனா வைரஸ் பிடியிலிருந்து நாட்டு மக்களை காக்க சீனா கடுமையாக உழைத்துவருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

Donald Trump Trump in India Coronavirus Outbreak China சீனா கடுமையாக உழைக்கிறது: டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ், சீனா, அமெரிக்கா, டொனால்ட் ட்ரம்ப், வைரஸ் தாக்குதல், ஆசிய நாடுகள், அமெரிக்க அதிபர் இந்தியப் பயணம், நமஸ்தே ட்ரம்ப், தொழில் அதிபர் சந்திப்பு, முகேஷ் அம்பானி China working hard to contain coronavirus outbreak: Trump
Donald Trump Trump in India Coronavirus Outbreak China சீனா கடுமையாக உழைக்கிறது: டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ், சீனா, அமெரிக்கா, டொனால்ட் ட்ரம்ப், வைரஸ் தாக்குதல், ஆசிய நாடுகள், அமெரிக்க அதிபர் இந்தியப் பயணம், நமஸ்தே ட்ரம்ப், தொழில் அதிபர் சந்திப்பு, முகேஷ் அம்பானி China working hard to contain coronavirus outbreak: Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் உள்ளிட்டோருடன் 36 மணி நேர பயணமாக இந்தியா வந்துள்ளார். அகமதாபாத் நகருக்கு வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியத் தொழிலதிபர்களுடன் உரையாடும் டொனால்ட் ட்ரம்ப்.

நேற்று நமஸ்தே ட்ரம்ப், தாஜ்மஹால் சுற்றுப்பயணம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை முறைப்படி சந்தித்தார். அதன்பின்னர் டெல்லி அமெரிக்க தூதரகத்தில் இந்தியத் தொழிலதிபர்களுடன் உரையாடினார்.

இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளுடன் இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானியும் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், “இந்தியத் தொழிலதிபர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

மேலும் கொரோனா வைரஸ் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க சீனா கடுமையான போராடுகிறது. இதனால் ஆசிய நாடுகளில் நிலைமைக் கட்டுக்குள் உள்ளது. இதுதொடர்பாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் பேசியுள்ளேன்.

அமெரிக்க தேர்தலில் தாம் வென்றால் சந்தைகள் ஏற்றத்தைச் சந்திக்கும். வரும் தேர்தல்களில் நான் வெற்றி பெறப்போகிறேன் என்று நினைக்கிறேன். நாங்கள் வெற்றி பெறும்போது சந்தைகள் உயரும்” என்றார்.

இதையும் படிங்க: என்ஆர்சிக்கு எதிராக பிகார் சட்டப்பேரவையில் தீர்மானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.