ETV Bharat / bharat

’கிராமங்களுக்குச் செல்வதில் இனி சிக்கலில்லை’- பிஎம்டிசியின் புதிய திட்டம்!

author img

By

Published : Aug 8, 2020, 7:31 PM IST

பெங்களூரு: கிராமப்புறங்களுக்கு நடைபயணமாக இல்லாமல் சைக்கிளில் செல்லும் வகையிலான திட்டத்தை பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழகம் (பிஎம்டிசி) அறிமுகப்படுத்தியுள்ளது.

plan by BMTC
plan by BMTC

நகரங்களிலிருந்து கிராமப்புறங்களுக்குச் செல்லுகையில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்னையை நிவர்த்தி செய்யும் வகையில் பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழகம் புதுமையான திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. பேருந்தின் முன்பகுதியில் கேரியர் அமைத்து அதில் சைக்கிளை வைத்திருப்பதுதான் இத்திட்டத்தின் ஹைலைட். இது பேருந்து செல்ல வசதியில்லாத கிராமப்புறங்களுக்கு பயணிக்க வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் பயணிகளைக் கவருவதோடு சைக்கிள் பயணத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. முதல் கட்டமாக 100 பேருந்துகளில் இந்த வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

பிஎம்டிசியின் புதிய திட்டம்

இத்திட்டத்தின் செயல்முறை

பிஎம்டிசி பேருந்து நிலையத்திற்கு பயணிகள் தங்களது சைக்கிளை எடுத்துவந்து தாங்கள் பயணிக்கவுள்ள பேருந்தின் கேரியரில் எடுத்துச் செல்லலாம். தங்களது கிராமத்திற்கு அருகாமை வரை பேருந்தில் பயணித்துவிட்டு, பின்னர் பதற்றமில்லாமல் சைக்கிளில் வீட்டை அடையலாம்.

இதையும் படிங்க:'சைக்கிள் ஷேரிங்' திட்டத்தில் மும்முரம் காட்டும் சென்னை மாநகராட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.