ETV Bharat / bharat

துணிச்சலான சீர்திருத்தங்கள் தேவை - முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்

author img

By

Published : Jul 31, 2020, 10:33 PM IST

கரோனா ஏற்படுத்திய பின்னடைவிலிருந்து இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க துணிச்சலான சீர்திருத்தங்கள் தேவை என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, வெளிமாநில தொழிலாளர்கள், சிறு குறு தொழிலில் ஈடுபடுவோர் ஆகியோர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதாரம் தேக்கநிலையை அடைந்துள்ளது என நிபுணர்கள் கருத்து கூறிவரும் நிலையில், கரோனா ஏற்படுத்திய பின்னடைவிலிருந்து இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க துணிச்சலான சீர்திருத்தங்கள் தேவை என முன்ளான் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ரிசர்வ் வங்கியின் இருப்புநிலையை அதிகரிப்பது சாத்தியமற்றது ஒன்றுமில்லை. ஆனால், பணவீக்கத்திற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே வளர்ச்சி மந்தமாக உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பலவீனமான பொருளாதார நிலையுடனே கரோனா சூழலில் நுழைந்தோம்.

துணிச்சலான சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். வேளாண்துறையில் மட்டுமே அப்படிப்பட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதுபோல் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மற்ற துறைகளில் இதுபோல் மேற்கொள்ளாதது துரதிருஷ்டவசமானது" என்றார்.

இதையும் படிங்க: கடந்த 2 நாள்களும் 50 ஆயிரத்தை தாண்டிய கரோனா... அவசர ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.