ETV Bharat / bharat

அருணாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலில் ஆளும் பாஜக வேட்பாளர் வெற்றி!

author img

By

Published : Jun 13, 2020, 10:38 AM IST

இட்டாநகர்: அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களைவை தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளார்.

BJP won
BJP won

அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் ஆளும் பாஜக வேட்பாளர் நபம் ரெபியா போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்திலிருந்து இவர் 1996 - 2002, 2002 - 2008 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் தொடர்ச்சியாக இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். வேட்புமனு வாபஸ் பெறும் இறுதி நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடத்தும் அலுவலர், நபம் ரெபியா போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவித்தார்.

எதிர்க்கட்சியான காங்கிரசின் முகுத் மிதியின் பதவிக்காலம் ஜூன் 23ஆம் தேதி முடிவடையும் நிலையில் காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்த ரெபியா மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

57 வயதான ரெபியா, சட்டப்பேரவை சபாநாயகராகவும், மாநில அமைச்சராகவும் சேவை செய்துள்ளார். 60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை, ஆளும் பாஜக-ஜே.டி.யு கூட்டணியில் பாஜக 41 உறுப்பினர்களும், ஜே.டி.யு ஏழு உறுப்பினர்களும் பெற்றுள்ளன. மேலும், அருணாச்சலின் உள்ளூர் மக்கள் கட்சி ஒரு உறுப்பினரும் மூன்று சுயேச்சை உறுப்பினர்களையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஊரடங்கால் வேலையின்றி பாலியல் தொழிலுக்குச் சென்ற இளம்பெண்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.