ETV Bharat / bharat

அமித்ஷா உருவ பொம்மையை எரித்த மாணவர்கள் - பல்கலைக்கழகத்தில் நுழைந்த பாஜக நிர்வாகிகள்!

author img

By

Published : Dec 11, 2019, 8:19 PM IST

புதுச்சேரி:பல்கலைக்கழகத்தில் அத்துமீறி நுழைந்த பாஜக நிர்வாகிகளை காவல்துறையினர் தடுக்க முயன்றது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Bjp protest
பல்கலைக்கழகத்தில் நுழைந்த பாஜக நிர்வாகிகள்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவ பொம்மையை எரித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மாணவர்களுக்குக் கண்டனம் தெரிவித்து புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள புதுவைப் பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, திடீரென்று ஆவேசமடைந்த கட்சி தொண்டர்கள் பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலைத் திறந்துகொண்டு உள்ளே சென்றனர்.

ன் பல்கலைக்கழகத்தில் நுழைந்த பாஜக நிர்வாகிகள்

இதைப் பார்த்த பாதுகாப்பிலிருந்த காவல் துறையினர், எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கத் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், காவல் துறைக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உருவப்படத்தை எரித்த மாணவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோஷங்களை பாஜக நிர்வாகிகள் எழுப்பினர்.

அதன்பின், காவல் துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்தி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: படிக்கட்டில் தொங்கிக்கொண்டு சென்றதால் நேர்ந்த விபரீதம் - 7ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

Intro:பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் புதுச்சேரி பல்கலைகழகத்தில் நுழைந்ததால் பரபரப்பு.... எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க காவல்துறை துரத்திச் சென்று அவர்களை தடுத்ததால் மேலும் பரபரப்பு கூடியது.Body:பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் புதுச்சேரி பல்கலைகழகத்தில் நுழைந்ததால் பரபரப்பு.... எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க காவல்துறை துரத்திச் சென்று அவர்களை தடுத்ததால் மேலும் பரபரப்பு கூடியது.


மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை மசோதா சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் உருவ பொம்மையை எரித்த தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அமித்ஷா உருவ பொம்மையை எரித்த மாணவர்களுக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள புதுவைப் பல்கலைக்கழகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆவேசமடைந்த கட்சி தொண்டர்கள் பல்கலைக்கழகத்தில் நுழைவு வாயிலை திறந்து கொண்டு உள்ளே சென்றனர். இதனால் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது உடனடியாக காவல்துறையினர் பின்தொடர்ந்து சென்று அவர்களை தடுத்தனர். அப்போது காவல் துறைக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று உள்துறை அமைச்சரின் உருவப்படத்தை எரித்த மாணவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரத் ஜனதா கட்சி நிர்வாகிகள் திடீரென பல்கலைக்கழகத்தில் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

..Conclusion:பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் புதுச்சேரி பல்கலைகழகத்தில் நுழைந்ததால் பரபரப்பு.... எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க காவல்துறை துரத்திச் சென்று அவர்களை தடுத்ததால் மேலும் பரபரப்பு கூடியது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.