ETV Bharat / bharat

“தந்திரக்காரர்களிடம் கவனமாக இருங்கள்”- வாக்காளர்களை எச்சரிக்கும் மாயாவதி!

author img

By

Published : Oct 26, 2020, 3:47 PM IST

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் தந்திரக்காரர்கள், மக்களை குழப்புவார்கள், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வாக்காளர்களை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எச்சரித்துள்ளார்.

Mayawati
Mayawati

பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளன.

இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 10 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

7 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 396 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இந்நிலையில், நாளை மறுநாள் (அக்.28) முதற்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று (அக்.26) மாலை 5 மணியுடன் முதற் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைகிறது.

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தலின் முதற்கட்ட தேர்தல் பரப்புரை இன்றுடன் முடிவடைகிறது. எனவே, ஆளுங், எதிர்க் கட்சிகள் சதிச்செயலில் ஈடுபட வாய்ப்புள்ளதால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஆர்.எல்.எஸ்.பி கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர்கள், உயர் சாதியினர் மற்றும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சம உரிமைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதே பகுஜன் சமாஜ் கட்சி, ஆர்.எல்.எஸ்.பி கூட்டணியின் நோக்கம் என மாயாவதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “சாமியார் ஆட்சியில், கோயில் குருக்களுக்கு பாதுகாப்பில்லை”- மாயாவதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.