ETV Bharat / bharat

மின்பா என்கவுன்ட்டரில் 23 மாவோயிஸ்டுகள் கொலை!

author img

By

Published : Sep 13, 2020, 9:43 PM IST

சத்தீஸ்கர்: மின்பா என்கவுன்ட்டரில் 23 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக காவல் துறை ஆணையர் தெரிவித்தார்.

Bastar Police reveals 23 Maoists killed in Minpa encounter
Bastar Police reveals 23 Maoists killed in Minpa encounter

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம் பஸ்தாரில் கடந்த மார்ச் 21ஆம் தேதி நடைபெற்ற மின்பா என்கவுன்ட்டரில் மொத்தம் 23 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இது குறித்து காவல் துறை ஆணையர் சுந்தேராஜ் வெயிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மின்பா என்கவுன்ட்டரில் 23 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

இதில், ரிசர்வ் குழு (டி.ஆர்.ஜி), சிறப்பு பணிக்குழு ( எஸ்.டி.எஃப்) மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்) வீரர்கள் 17 பேர் தங்களது உயிரை தியாகம் செய்தனர். உளவுத்துறை தகவலின் அடிப்படையில் பெஜி, எலர்மட்கு முகாமில் இருந்து பென்டபாட் - என்டபாட் வனப்பகுதியை நோக்கி சுக்மா காவல் துறையினர் சென்றனர்.

அப்போது, நடைபெற்ற மற்றொரு என்கவுன்ட்டரில், மாவோயிஸ்டுகள் முகாம்களில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆவணங்களில், இருந்த ஒரு கடிதத்தில், கரோனா ஊரடங்கு காரணமாக அந்த குழு கஷ்டங்களை எதிர்கொண்டு வருவது கண்டறியப்பட்டது. இதனால், மாநில, மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.