ETV Bharat / bharat

நெருங்கும் ஒரு கோடி பாதிப்பு; கோவிட்-19 இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து தப்புமா இந்தியா?

author img

By

Published : Dec 9, 2020, 4:15 PM IST

தினசரி பாதிப்பு நிலவரத்தின்படி இந்தியாவில் இன்னும் கோவிட்-19 பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்படவில்லை எனத் தெரியவருகிறது.

India's COVID-19
India's COVID-19

நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கிவருகிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை, 97 லட்சத்து 35 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், அடுத்த 7-10 நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின் முறையே 3 முதல் 9 இடங்களில் உள்ளன. பத்தாவது இடத்தில் உள்ள அர்ஜென்டினா மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவுக்கும் சாதகமான ஒரு ஒற்றுமை உள்ளது.

அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தற்போது கோவிட்-19 பாதிப்பின் இரண்டாம் அலை சந்தித்துள்ளன. குறிப்பாக முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் மேல் பாதிப்புகள் ஏற்பட்டுவருகின்றன. டாப்-10 நாடுகளில் இந்தியா மற்றும் அர்ஜென்டினா மட்டும்தான் இரண்டாம் அலை பாதிப்பை சந்திக்கவில்லை.

இந்தியாவில் டெல்லி, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு உயர்வாக காணப்பட்டாலும், ஒட்டுமொத்த அளவில் நோய் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. மேற்கண்ட மாநிலங்களிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதக் காலத்தில் நாள்தோறும் சுமார் ஒரு பாதிப்பு ஏற்பட்டுவந்த நிலையில், தற்போது சராசரியாக 30 ஆயிரம் பாதிப்புகள் பதிவாகின்றன. கரோனா பரிசோதனைகளும் நாள்தோறும் சரிசரியாக 10 லட்சத்துக்கும் குறைவில்லாமல் மேற்கொள்ளப்படுகிறது.

லாக்டவுண் தளர்வு, பண்டிகைகாலம் உள்ளிட்ட சவாலான நாள்களை கடந்த பின்னரும் இந்தியா தற்போதுவரை இரண்டாம் அலையை சந்திக்காமல் தப்பியுள்ளது.

தடுப்பூசி தொடர்பான முன்னெடுப்புகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதால் அடுத்த சில மாதங்களுக்கு இதேநிலையை இந்தியா தக்க வைத்தால், இரண்டாம் அலை என்ற பேராபத்து தடுக்கப்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களைப் பார்வையிட விரைந்த வெளிநாட்டுத் தூதர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.