ETV Bharat / bharat

எரிவாயு கிணற்றில் தீ விபத்து : மீட்புப்பணிகளுக்கு உதவும் வகையில் பாலம் கட்டிவரும் ராணுவம்!

author img

By

Published : Jun 18, 2020, 2:58 PM IST

கவுஹாத்தி : அஸ்ஸாம் எரிவாயு கிணற்றில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் தொழிற்நுட்ப முயற்சிக்கு உதவும் வகையில் பேரிடர் மீட்புப்படை பாலம் ஒன்றை கட்டத் தொடங்கியுள்ளது.

எரிவாயுக் கிணறு தீவிபத்து : மீட்புப்பணிகளுக்கு உதவும் வகையில் பாலம் கட்டிவரும் ராணுவம்!
எரிவாயுக் கிணறு தீவிபத்து : மீட்புப்பணிகளுக்கு உதவும் வகையில் பாலம் கட்டிவரும் ராணுவம்!

அஸ்ஸாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தை அடுத்துள்ள பக்ஜான் கிராமத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்துவருகிறது. அந்நிறுவனத்திற்குச் சொந்தமான எரிவாயு உற்பத்திசெய்யும் கிணற்றில் கடந்த 8ஆம் தேதி திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் ஏறத்தாழ 30 கி.மீ. தொலைவு வரை உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் கடும் மாசடைந்துள்ளதாக அறிய முடிகிறது.

தற்போது இந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட பெரும் தீயை அணைக்க சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலிருந்து வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த வல்லுநர்கள் குழு, கடந்த 9 நாள்களாக எரிவாயு கசிவைத் தடுக்கப் பணியாற்றிவருகிறது. தீ விபத்து ஏற்பட்டுள்ள கிணறு ஏறத்தாழ 4,500 பி.எஸ்.ஐ. (சதுர அங்குல பவுண்டுகள்) ஆழம் வரை நீளுவதால் எரிவாயு கட்டுப்பாடில்லாமல் பாயும். இதன் காரணமாக எரிவாயுக் கசிவைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகமான வெப்பத்தை வெளிக்கொணர்வதால் 50 மீட்டருக்கு அப்பால் யாருமே அந்தக் கிணற்றை அணுக முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவரும் தொழிற்நுட்ப வல்லுநர் குழுவினரின் பணிகளுக்கு உதவ எரிவாயுக் கிணற்றை ஒட்டியுள்ள நீர்நிலைக்கு அருகில் பாலம் ஒன்றை அமைக்குமாறு தின்சுகியா மாவட்ட காவல்துறை துணை ஆணையர் பாஸ்கர் பெகு பேரிடர் மீட்புப் படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது வேண்டுகோளை அடுத்து, தற்போது ராணுவத்தினர் நீர்நிலை ஒன்றில் அருகிலிருந்து 150 அடி உயரமான பாலத்தை கட்டி வருகின்றனர். அஸ்ஸாமில் ஒலிபரப்பாகி வரும் திப்ருகார் அகில இந்திய வானொலி, பீதியில் உள்ள மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பேரிடர் மீட்புப்பணியில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து "பாக்ஜன் பார்தா" என்ற பெயரில் தெரிவித்து வருகின்றது. இந்த தீ விபத்து குறித்து விசாரணையை மேற்கொள்ள உயர்மட்ட விசாரணைக் குழுவொன்றை அமைப்பதாக அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் ஆயில் நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், "தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படும். விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தீயை கட்டுப்படுத்த வரைவு திட்டம் ஒன்றை பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திடம் ஆயில் இந்தியா நிறுவனம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இது நிலத்தடி மூலங்களில் பற்றி எரிந்துகொண்டிருந்த நெருப்பு, பெரிய அளவிலான ஆக்ஸிஜனை விழுங்கியபோது, அந்த இடத்தில் வெற்றிடம் உருவாகிறது. இதன் விளைவாக திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என வேதியல் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பாக்ஜானில் உள்ள எரிவாயு கிணறு தளத்தின் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 7,000 பேரை 14 நிவாரண முகாம்களுக்கு மாற்றியுள்ளதாக நிறுவனமும் டின்சுகியா மாவட்ட நிர்வாகமும் தெரிவித்துள்ளன.

குதிரைகளுக்கு பெயர் பெற்ற திப்ரு-சைகோவா தேசிய பூங்கா, விபத்து ஏற்பட்ட கிணற்றிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் இருப்பதால் வன உயிர்களின் நிலை குறித்து சுற்றுச்சூழல் வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்துக்களுக்காக ஓ.ஐ.எல்., ஜான் எனர்ஜி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அஸ்ஸாம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.