ETV Bharat / bharat

நாடு-நேடு திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் கோடி ஒதுக்கிய ஆந்திர முதலமைச்சர்

author img

By

Published : May 16, 2020, 5:44 PM IST

Updated : May 16, 2020, 8:11 PM IST

அமராவதி: ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளை சீரமைக்க ரூ.16,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

ஆந்திர முதலமைச்சர்
ஆந்திர முதலமைச்சர்

ஆந்திர பிரதேசம் மாநிலம் அமராவதியில் நாடு-நேடு திட்டத்தின் கீழ் மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிராமப்புற சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சுகாதார மையங்கள், மாவட்ட அளவிலான மருத்துவமனைகள் மேம்பாடு குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன், அலுவலர்களிடம் ஆலோசனை செய்தார்.

புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவது தொடர்பாக, பழங்குடியினர் பகுதிகளில் ஏழு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளையும், ஆறு மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க ரூ. 6,100 கோடி மதிப்பிலான திட்டங்கள் முதலமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.

ஆரம்ப சுகாதார மையங்களின் அம்சங்களைப் பற்றி விவாதித்த அலுவலர்கள், மாநிலம் முழுவதும் தற்போதுள்ள 1138 ஆரம்ப சுகாதார மையங்களில் 149 புதிய மையங்கள் ரூ. 256.99 கோடி செலவில் உருவாக்கப்படும். மேலும், 989 ஆரம்ப சுகாதார மையங்கள் ரூ. 413 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளதாகவும், நாடு-நேடு திட்டத்தின் கீழ், 52 மருத்துவமனைகள், 169 சுகாதார நிலையங்கள் மொத்தம் ரூ. 1236 கோடி பட்ஜெட்டுடன் புதுப்பிக்கப்பட உள்ளதாக கூறினர்.

இது குறித்து அலுவலர்களிடம் ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது;

மாநிலம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளோடு ஒரு நர்சிங் கல்லூரியை அமைக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானங்களில் தரமான உள்கட்டமைப்பு வேண்டும். கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும், கிராமப்புறத்தைச் சுற்றி சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதற்கும், தற்போதுள்ள துணை மையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளைச் சீரமைக்க ரூ. 16,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராம பகுதிகளில் தற்போதுள்ள 1,086 துணை மையங்களைத் தவிர, கூடுதலாக 10,000 ஒய்.எஸ்.ஆர் சுகாதார மையங்கள் ரூ. 2626 கோடி பட்ஜெட்டுடன் நிறுவப்பட உள்ளன. இது தொடர்பாக, ஜூன் 15ஆம் தேதிக்கு முன்னர் நிலங்களை அடையாளம் கண்டு, 2021 மார்ச் மாதத்திற்குள் திட்டத்தை முடிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த மறு ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அல்லா காளி கிருஷ்ணா, தலைமைச் செயலாளர் நீலம் சாவ்னி, சிறப்புத் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஜவஹர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தெலங்கானாவில் லாரி மீது கார் மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு!

Last Updated : May 16, 2020, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.