ETV Bharat / bharat

ஏழை மக்களிடமிருந்து பெறப்பட்ட ரூ.1,323 கோடியை திரும்ப அளிக்க ஆணை!

author img

By

Published : Jun 3, 2020, 6:22 PM IST

அமராவதி: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஏழை மக்களிடம் இருந்து பெற்ற ரூ. 1,323 கோடி வீட்டுக் கடன் தவணைத் தொகையினை திரும்ப அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Andhra Pradesh CM YS Jagan Mohan
Andhra Pradesh CM YS Jagan Mohan

ஆந்திராவில் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த ஆட்சியில் ஏழை மக்களிடம் இருந்து வீட்டுக்கடன் தவணையாக திரும்பப் பெறப்பட்ட ரூ. 1,323 கோடியினை திரும்பக் கொடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் வரும் ஜூலை மாதம் 8ஆம் தேதி, அவரின் தந்தை ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏழை மக்களுக்கு 15 லட்சம் வீடுகளை விசாகப்பட்டினம், கர்னூல், நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் கட்டிக் கொடுக்கும் பணி, தொடங்கி வைக்கப்பட உள்ளது.

வீடுகளில் அனைத்து அடிப்படை வசதியுடன், சிறந்த தரத்தில் கட்டிக்கொடுப்பதோடு அதற்கான வீட்டுப் பட்டாக்களை குடும்பத் தலைவி பெயர்களில் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடும் காங்கிரஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.