ETV Bharat / bharat

பிரதமர் தொடங்கி வைத்த கடல் விமான சேவை ஒரு மாதத்தில் நிறுத்தம்?

author img

By

Published : Nov 29, 2020, 10:47 PM IST

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்த நாட்டின் கடல் விமான சேவை பரமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது.

seaplane service temporarily suspended for maintenance
seaplane service temporarily suspended for maintenance

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையை கெவாடியாவில் உள்ள சிலையுடன் இணைக்கும் கடல் விமான சேவையை கடந்த அக்டோபர் 31ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அகமதாபாத் முதல் கெவாடியா வரை 220 கி.மீ. தூரத்தை 45 நிமிடங்களுக்குள் வந்தடையும்.

19 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வழங்குகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கடல் விமான சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது.

இது குறித்து ஸ்பைஸ் ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த விமானம் தற்போது பராமரிப்பு பணிகளுக்காக மாலத்தீவு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த விமானத்தை பராமரிக்கும் வகையிலான பராமரிப்பு மையம் தற்போது அகமதாபாத்தில் கட்டுமானத்தில் உள்ளது.

அது விரைவில் கட்டி முடிக்கப்பட்டால் வரும் காலங்களில் இங்கேயே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இது ஏற்கனவே திட்டமிட்பபட்ட பராமரிப்பு பணி என்பதால் நவம்பர் 27ஆம் தேதிக்கு பின் நாங்கள் எவ்வித முன்பதிவையும் பெறவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், டிசம்பர் 15ஆம் தேதி விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும் ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஹிமாச்சலில் தயாராகும் ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.