ETV Bharat / bharat

'தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமா ராவ் பதவி விலக வேண்டும்' - காங்கிரஸ் வலியுறுத்தல்

author img

By

Published : Jun 7, 2020, 2:53 PM IST

ஹைதராபாத்: அமைச்சர் கே.டி. ராமா ராவுக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணை நடைபெறும் நிலையில், தார்மீக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

KT RAMA RAO
KT RAMA RAO

ஹைதராபாத் அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதியில், அம்மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.டி. ராமாராவ் 25 ஏக்கர் பரப்பளவில் பண்ணை நடத்துவதாகக் கூறி, அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், விசாரணைக் குழு ஒன்று நியமித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், ரேவந்த் ரெட்டியின் குற்றச்சாட்டுகளை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள், அதனை அறிக்கையாகச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரேவந்த் ரெட்டி, "இந்த விசாரணை எந்தத் தலையீடுமின்றி சுதந்திரமாக நடைபெறுவதை உறுதிசெய்ய அமைச்சர் கே.டி. ராமா ராவ் பதவி விலக வேண்டும் அல்லது முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க : 'கேரள வனத்துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.