ETV Bharat / bharat

2019ஆம் ஆண்டில் 32,563 தினக்கூலிகள், 10,281 வேளாண்துறையினர் தற்கொலை

author img

By

Published : Sep 2, 2020, 11:46 PM IST

2019ஆம் ஆண்டில் மட்டும் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலிகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேளாண்துறையினர் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்றவியல் காப்பகம் தெரிவித்துள்ளது.

NCRB
NCRB

2019ஆம் ஆண்டில் நடைபெற்ற தற்கொலை தொடர்பாக தேசிய குற்றவியல் காப்பகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வேளாண் துறை, தினக்கூலித் தொழில் செய்வோர் தொடர்பான விவரங்கள் தெரியவந்துள்ளன.

அதன்படி, 2019ஆம் ஆண்டில் 32 ஆயிரத்து 563 தினக்கூலிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது 2019ஆம் ஆண்டு நாட்டில் நடைபெற்ற மொத்த தற்கொலைகளில் 23.4 விழுக்காடு அளவாகும். 2018ஆம் ஆண்டின் எண்ணிக்கை 30,132 ஆக இருந்த நிலையில், 2019 ஆண்டு இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

அதேப்போல், 2019ஆம் ஆண்டில் மட்டும் வேளாண் துறையைச் சார்ந்த 10 ஆயிரத்து 281 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 5 ஆயிரத்து 957 பேர் விவசாயிகள், 4 ஆயிரத்து 324 பேர் விவசாய தொழிலாளர்கள். 2018ஆம் ஆண்டின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 349ஆக இருந்த நிலையில், 2019ஆம் ஆண்டின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வேளாண்துறை சார்ந்த தற்கொலைகள் அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாமிடத்திலும், ஆந்திர பிரதேசம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கான ஆகியவை முறையே அடுத்த இடங்களில் உள்ளன.

இதையும் படிங்க: லட்சத்தைத் தாண்டிய படித்த சிறைக்கைதிகளின் எண்ணிக்கை - என்.சி.ஆர்.பி அறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.