ETV Bharat / bharat

புதுச்சேரியில் 14ஆவது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு

author img

By

Published : Feb 2, 2020, 10:00 AM IST

புதுச்சேரி: 14ஆவது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு பிப்ரவரி 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் இளமதி சானகிராமன் பேட்டி
புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் இளமதி சானகிராமன் பேட்டி

புதுச்சேரி பல்கலைக்கழகம் சுப்ரமணி பாரதி தமிழியற்புலம், மானிடவியல் துறையைச் சேர்ந்த முனைவர் இளமதி சானகிராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சுப்பிரமணிய பாரதி தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இணைந்து நடத்தும் 14ஆவது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு புதுச்சேரியில் பிப்ரவரி மாதம் 6 ,7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த மாநாட்டை புதுவை பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீர்சிங் தொடக்கி வைக்கிறார். முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாநாட்டு மலரினை வெளியிட்டு, உலக தமிழ்மாமணி விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். மாநாட்டில் கலைநிகழ்ச்சிகள், தொல்பொருள் கண்காட்சி, பன்னாட்டு அறிஞர்கள் அரங்கம் ஆகியன இடம் பெறுகின்றன" என்றார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் இளமதி சானகிராமன் பேட்டி

மேலும் பேசிய அவர், "ஒன்பது வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழ் ஆய்வாளர்கள், அறிஞர்கள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்கின்றனர். இந்திய நாட்டிலிருந்து 90க்கு மேற்பட்ட மிகச்சிறந்த ஆய்வாளர்கள் பங்கேற்று மாநாட்டை சிறப்பிக்க உள்ளனர். பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெறும் இந்த மாநாட்டின் நிறைவு விழாவில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா சிறப்புரை ஆற்றுகிறார்" என்றார்.

இதையும் படிங்க:

2020 பட்ஜெட் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

Intro:புதுச்சேரியில் 14ஆவது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு வரும் 6 7 ஆம் தேதி புதிய பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது என்று முனைவர் இளமதி சானகிராமன் தெரிவித்துள்ளார்


Body:சுப்ரமணி பாரதி தமிழ்யற்புலம் மற்றும் மானிடவியல் துறை புதுவை பல்கலைக்கழகம் சாரதி முனைவர் இளமதி சானகிராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்

சுப்பிரமணிய பாரதி தமிழியற்புலம் மற்றும் புதுவைப் பல்கலைக்கழகம் ,புதுச்சேரி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இணைந்து நடத்தும் 14ஆவது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு புதுச்சேரியில் பிப்ரவரி மாதம் 6 ,7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகவும்

மாநாட்டை புதுவை பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீர்சிங் துவக்கி வைக்கிறார் முதல் அமைச்சர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாநாட்டின் மலரினை வெளியிட்டு உலக தமிழ்மாமணி விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார் மாநாட்டில் கலைநிகழ்ச்சிகள் தொல்பொருள் கண்காட்சி பன்னாட்டு அறிஞர்கள் அரங்கம் ஆகிய வன இடம் பெறுகின்றன என்றும் அவர் கூறினார்
மேலும் 9 வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழ் ஆய்வாளர்கள் அறிஞர்கள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்கின்றனர்
மற்றும் இந்திய நாட்டில் இருந்து 90 க்கு மேற்பட்ட மிகசிறந்த ஆய்வாளர்கள் பங்கேற்று மாநாட்டை சிறப்பிக்க உள்ளனர் பிப்ரவரி ஏழாம் தேதி நடைபெறும் மாநாட்டின் நிறைவு விழாவில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா சிறப்புரை ஆற்றுகிறார் என்றும் முனைவர் இளமதி சானகிராமன் செய்தியாளரிடம் இதனை தெரிவித்தார்


Conclusion:புதுச்சேரியில் 14ஆவது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு வரும் 6 7 ஆம் தேதி புதிய பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது என்று முனைவர் இளமதி சானகிராமன் தெரிவித்துள்ளார்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.