ETV Bharat / bharat

பெங்களூரு வாகனத்தின் முன்புறம் இருந்த நபரை இடித்தபடி நகர்ந்த வாகனத்தினால் பரபரப்பு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 6:21 PM IST

Bengaluru car viral: பெங்களூரு மிகவும் பரபரப்பான ஹெப்பல் மேம்பாலத்தில் வாகனத்தின் முன்புறம் இருந்த நபரை இடித்தபடி நகர்ந்த வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

bengaluru-fight-between-two-drivers-captured-on-mobile
பெங்களூரு ஹெப்பல் மேல்பாலத்தில் வாகத்தின் முன்புறம் இருந்த நபரை இடித்தப்படி நகர்ந்த வாகனத்தினால் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூரு மாநகரில் பரபரப்பாகக் காணப்படும் ஹெப்பல் மேம்பாலத்தின் நடுவில் கார் ஒன்று மற்றொரு கார் ஓட்டுநரைத் தனது வாகனத்தின் முன்புறம் வைத்து இடித்தபடி நகர்ந்தது இது அப்பகுதியில் நின்ற மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் தங்களது மொபைல் மூலம் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதீப் ஹெர்லே என்ற நபர் தனது X பக்கப்பதிவில், "நவம்பர் 28ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 8.40 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இதில் கார் ஓட்டுநர் ஒருவார் மற்றொரு கார் ஓட்டுநரைக் காரை வைத்து இடித்தபடி 100 மீட்டர் வரை சென்ற வீடியோ பதிவைப் பதிவிட்டுள்ளார். மேலும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ பதிவில், ஒரு நபர் காரின் முன்பக்கம் சாய்ந்து நிற்பது போன்றும் அந்த நபரை ஓட்டுநர் இடித்தபடி சென்றுள்ளார். அதன்பின், கார் ஓட்டுநர் இறங்கி வந்து காரின் முன்புறம் இருந்த நபரைத் தாக்குவது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வீடியோவில் இருக்கும் கார் எண்ணையும் பிரதீப் ஹெர்லே என்ற நபர் தனது X பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி? ராகுல் காந்தி தேர்வு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.