ETV Bharat / bharat

வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு: பிபிசி நிறுவனம்

author img

By

Published : Feb 14, 2023, 4:50 PM IST

வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக பிபிசி ஊடக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பிபிசி ரெய்டு
பிபிசி ரெய்டு

புதுடெல்லி: இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிபிசி ஊடக நிறுவனம், பல்வேறு நாடுகளில் கிளைகளை நிறுவி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் செயல்படும், பிபிசி ஊடக நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பிபிசி அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், செய்தியாளர்களின் செல்போன் மற்றும் லேப்டாப்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில், "பிபிசி அலுவலகத்தில் நாங்கள் சோதனையிடவில்லை. அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கு புத்தகங்களை சரிபார்க்கிறோம். சோதனை முடிவடைந்த பின் ஊழியர்களின் செல்போன்கள் திருப்பி வழங்கப்படும்" எனக் கூறினர்.

  • The Income Tax Authorities are currently at the BBC offices in New Delhi and Mumbai and we are fully cooperating.

    We hope to have this situation resolved as soon as possible.

    — BBC News Press Team (@BBCNewsPR) February 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் பிபிசி ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எங்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தின் முதலமைச்சராக பிரதமர் நரேந்திர மோடி இருந்த போது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு கலவரம் வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம், "India: The Modi Question" என்ற இரண்டு பகுதிகள் கொண்ட ஆவணப்படத்தை கடந்த மாதம் வெளியிட்டது.

இப்படம் தேச விரோதத்தை பரப்புவதாகக் கூறி, தடை விதித்த மத்திய அரசு, யூ-டியூப் மற்றும் டிவிட்டரில் பகிரப்பட்ட, ஆவணப்படத்தின் லிங்கையும் முடக்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், படத்தை வெளியிட்ட பிபிசி ஊடக நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

BBC IT Raid: டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.