ETV Bharat / bharat

மும்பை-அகமதாபாத்: ஆகாசா ஏர் நிறுவனத்தின் முதல் விமான சேவை தொடக்கம்

author img

By

Published : Aug 7, 2022, 8:28 PM IST

மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமான சேவை தொடங்கியது.

aviation-minister-scindia-flags-off-akasa-airs-inaugural-flight
aviation-minister-scindia-flags-off-akasa-airs-inaugural-flight

டெல்லி: மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமான சேவை இன்று (ஆக 7) தொடங்கியது. இந்த சேவையை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவும், இணை அமைச்சர் வி கே சிங்கும் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் ஆகாசா ஏர் விமான நிலைய நிறுவனர் ராக்கர்ஸ் ஜூன்ஜூன் வாலா அவரது மனைவி ரேகா ஜூன்ஜூன் வாலா, ஆகாச ஏர் நிறுவனத்தின் முதன்மை தலைமை அதிகாரி வினய் துபே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜோதிராதித்யா சிந்தியா, இந்த விமான சேவை இந்திய விமான போக்குவரத்து சரித்திரத்தில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும். முன்னதாக விமான சேவை மிக உயர் வகுப்பினருக்கானதாக மட்டுமே இருந்தது. ஆனால் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை காரணமாக மலிவான விமானப் பயணம் ஏழை எளியவர்க்கும் சாத்தியமாக்கி உள்ளது.

இத்தகைய தருணத்தில் விமான போக்குவரத்து துறையில் நுழைந்த ஆகாச ஏர் விமான நிறுவனத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாட்களில் ஆகாச ஏர் நிறுவனம் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறேன். கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் விமான போக்குவரத்து துறை முற்றிலுமாக மாற்றம் அடைந்துள்ளது.

உடான் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 425 வழித்தடங்கள் ஆயிரம் வழித்தடங்களாக அதிகரிக்கும். 68 புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படுவதன் மூலமாக நாட்டில் மொத்தம் 100 விமான நிலையங்கள் என்ற இலக்கை எட்ட முடியும். அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் 40 கோடி பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்வார்கள். போக்குவரத்து துறையில் ரயில் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்துக் போலவே உள்நாட்டு விமான போக்குவரத்து மிக முக்கியமான இடத்தை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.

இதையும் படிங்க: நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் முக்கியத்துவம் வாய்ந்தது - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.