ETV Bharat / bharat

கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றே கண்டறியப்படாத மிக முக்கிய பகுதி எது தெரியுமா?

author img

By

Published : Jun 15, 2021, 3:13 AM IST

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்குக் கூட கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

Dharavi logs Zero new COVID 19 cases, Asia largest slum covid, Dharavi, COVID 19 case in Dharavi, Brihanmumbai Municipal Corporation, BMC, ஜீரோ தாராவி, தாராவி கரோனா, கொரோனா தாராவி, கரோனா தொற்றே கண்டறியப்படாத மிக முக்கிய பகுதி, பெரிய குடிசைப் பகுதி, தாராவி
ஜீரோ தாராவி

மும்பை (மகாராஷ்டிரா): தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருவருக்கு கூட கரோனா தொற்று கண்டறியப்படவில்லை என மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 2ஆம் தேதிக்குப் பிறகு ஒரு பாதிப்பு கூட பதிவாகாதது இதுவே முதன்முறை. தாராவியில் நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 6,861 ஆக உள்ளது.

நோய்த் தொற்றுக்கு இன்னும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 13 ஆக உள்ளது. இதில் ஆறு பேர் வீட்டுத் தனிமையிலும், ஏழு பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

’கிக்’ ஏற்றி கிறங்கடிக்கும் கியாரா அத்வானி போட்டோஷூட்

ஏப்ரல் 8ஆம் தேதி 99 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதே கரோனா 2ஆம் அலையில் தாராவி குடிசைப் பகுதியில் தினசரி பாதிப்பின் அதிகபட்ச எண்ணிக்கை.

தாராவியில் கடந்தாண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கரோனா தொற்று பதிவானது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.