ETV Bharat / bharat

பெங்களூருவில் ஆப்பிள் அலுவலகம்! 15 தளங்களுடன் புதிய பிரமாண்ட அலுவலகம் திறப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 2:21 PM IST

பெங்களூருவில் ஆப்பிள் நிறுவனம், 1200 ஊழியர்கள் பணியாற்றும் வகையில் 15 தளங்களுடன் கூடிய புதிய அலுவலகத்தை திறந்து உள்ளது

பெங்களூருவில் 15 தளங்களுடன் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பிரமாண்ட அலுவலகம் திறப்பு

பெங்களூரு: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தங்களது உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக பெங்களூருவின் மையப் பகுதியில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. பெங்களூருவில் மின்ஸ்க் ஸ்கொயர் (minsk square) என்ற மாநகராட்சியின் மையப் பகுதியில் 1200 ஊழியர்கள் பணியாற்றும் வகையில், லேப், இளைப்பாறும் பகுதி உள்ளிட்ட 15 தளங்களுடன் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ஏற்கனவே பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கட்டமைப்பு, வாடிக்கையாளர்கள் உரையாடல் உள்ளிட்டவற்றிற்கு நாட்டின் முக்கிய பகுதியாக உள்ளது. ஆப்பிள் நிறுவன ஊழியர் இந்த அலுவலகம் குறித்து கூறுகையில், "இந்த அலுவலகம் மற்ற அலுவலகம் போலவே படைப்பாற்றல், ஊழியர்களின் உறவு மேம்படுதல், அணி ஒற்றுமை ஆகியவை மேம்பட அற்புதமான இடமாக இருக்கும்” என கூறியுள்ளார்.

ஆப்பிள் அலுவலகம் உள்நாட்டு கட்டுமான பொருட்களுடன், உள் கட்டமைப்பு ஆகியவை பல்வேறு டிசைன்களில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் தங்களது வசதிகளை 2018ஆம் ஆண்டு முதல் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் உருவாக்கி வருகிறது. இந்தியாவில் ஆப்பிள் அலுவலகம் மும்பை, ஹைதராபாத், குருகிராம் ஆகிய கிளைகளுக்கு பிறகு பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் கிட்டதட்ட 3000 ஊழியர்களை கொண்டுள்ளது. ஆப்பிள் நிறூவனம் இந்தியாவில் சுற்றுச்சூழல், கல்வி, மற்றும் வேலை வாய்ப்பு மேம்பாடு உல்ளிட்டவற்றை மேம்படுத்தும் நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து பணிபுரிந்து வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஆப்பிள் போன் தயாரிப்பில் 1 லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டுகிறது. அதே வேளையில் மற்ற நாடுகளின் வரியை பொறுத்து இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மார்க்கெட் விகிதம் அதிகமாக இருக்கக்கூடும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: குஜராத் சர்வதேச மாநாட்டை கலக்க வரும் பறக்கும் கார் தொழில்நுட்பம்! இந்தியாவில் சாத்தியமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.