ETV Bharat / bharat

Andhra Pradhesh Night Curfew:ஆந்திரப் பிரதேசத்தில் அமலுக்கு வருகிறது இரவுநேர ஊரடங்கு!

author img

By

Published : Jan 18, 2022, 8:14 PM IST

Andhra Pradhesh Night Curfew: கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருவதால், ஆந்திரப் பிரதேச அரசு இன்று இரவு முதல் மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆந்திர
ஆந்திர

விசாகப்பட்டினம்: Andhra Pradhesh Night Curfew: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றால், ஆந்திரப் பிரதேச மாநில அரசு இன்று ஜன.18ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அதன்படி, இரவு 11.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமணம், ஆன்மிகம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகளுடன் பொது நிகழ்ச்சிகளில் 100 முதல் 200 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரவுநேர ஊரடங்கு அமல்
இரவுநேர ஊரடங்கு அமல்

மேலும், இரவுநேர ஊரடங்கின்போது, அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் மட்டும் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பரவலுக்கிடையே ஆசிரியர்களுக்கு நேரடியாக புத்தாக்கப் பயிற்சியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.