ETV Bharat / bharat

மேட்ச் ஃபிக்சிங்: இந்திய கால்பந்து கிளப்களில் சிபிஐ விசாரணை

author img

By

Published : Nov 21, 2022, 9:18 PM IST

இந்திய கால்பந்து கிளப்கள் மீது சூதாட்ட புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து சிபிஐ விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Indian football clubs
Indian football clubs

டெல்லி: இந்திய கால்பந்து கிளப்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் சிபிஐ 15 நாட்களுக்கு முன்பே விசாரணையை தொடங்கியது. முதல்கட்டமாக டெல்லியில் உள்ள அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் அலுவலகத்தில் இருந்து இந்திய கால்பந்து கிளப்புகளின் ஆவணங்களை சிபிஐ சேகரித்தது. அதைத்தொடர்ந்து, போட்டிகளின் முடிவுகளை மாற்றுவதில் சிங்கப்பூரை சேர்ந்த மேட்ச் ஃபிக்சிங் கும்பலுடன் சேர்ந்து சில கால்பந்து வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் பெயர்களை வெளியிட சிபிஐ மறுத்துள்ளது. இது விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் என்பாதல் வெளியிடவில்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மற்ற கால்பந்து கிளப்புகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி விசாரணைக்கு ஒத்துழைப்பை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட கிளப்புகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் குற்றம் நிரூபணமானால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பிஃபா உலகக் கோப்பை போட்டி ...ஒடிசாவில் கால்பந்து சிற்பம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.