ETV Bharat / bharat

2022 தேர்தலில் போட்டியில்லை - அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

author img

By

Published : Nov 1, 2021, 7:49 PM IST

Updated : Nov 1, 2021, 7:56 PM IST

2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

Akhilesh Yadav
Akhilesh Yadav

2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியில் கட்சிகள் தேர்தல் பரப்புரையை தீவிரமாகத் தொடங்கியுள்ளன. இதற்கு முன் ஆட்சியிலிருந்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விஜய் யாத்திரை என்ற பெயரில் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில், வரப்போகும் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், ராஷ்டிரிய லோக்தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், வரப்போகும் தேர்தலில் தனது சித்தப்பா சிவ்பால் யாதவ் கட்சியுடன் இணைந்து செயல்பட எந்த தயக்கமும் இல்லை எனவும் அகிலேஷ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் கணவருடன் கபடி விளையாடிய ரோஜா

Last Updated : Nov 1, 2021, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.