ETV Bharat / bharat

சரத் பவார் - அஜித் பவார், 8 அமைச்சர்கள் திடீர் சந்திப்பு... மராட்டிய அரசியலில் திடீர் சலசலப்பு!

author img

By

Published : Jul 16, 2023, 3:28 PM IST

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையிலான 8 அமைச்சர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது மராட்டிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ajit Pawar
Ajit Pawar

மும்பை : மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையிலான 8 அமைச்சர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது அம்மாநில அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெற்கு மும்பையில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் மையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார், அவருடன் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட 8 பேர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரபுல் பட்டேல் உள்ளிட்ட இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சந்திப்பு முன்பே திட்டமிடப்பட்டது இல்லை என்றும் யஷ்வந்த்ராவ் சவான் மையத்தில் சரத் பவார் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கி 8 அமைச்சர்கள் உள்ளிட்டோர் விரைந்து சென்றதாக பிரபுல் பட்டேல் தெரிவித்தார். மேலும் 8 அமைச்சர்களும் சரத் பவாரிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக அங்கு சென்றதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்ததாகவும் பிரபுல் பட்டேல் தெரிவித்து உள்ளார்.

அண்மையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆதரவு எம்.எல்.ஏக்களை திரட்டிக் கொண்டு ஆளும் பாஜக - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் அஜித் பவார் இணைந்தார். தொடர்ந்து மகாராஷ்டிர துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார்.

அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அஜித் பவார் மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு இலாக்கா ஒதுக்குவதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் வகித்து வரும் நிதி அமைச்சர் பதவியை அஜித் பவாருக்கு வழங்க ஏக்நாத் ஷிண்டே அணி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற துணை முதலமைச்சர் அஜித் பவார், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், அதற்குள் அமைச்சரவை இலாகா மாற்றம் குறித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Opposition parties meeting: பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.