ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசத்தில் ஓவைசி கார் மீது துப்பாக்கிச் சூடு!

author img

By

Published : Feb 3, 2022, 6:56 PM IST

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரைக்காக சென்ற அசாதுதீன் ஓவைசி கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Asaduddin Owaisi
Asaduddin Owaisi

டெல்லி : உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்.20ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையை நிகழ்த்திவிட்டு AIMIM கட்சியின் நிறுவனத் தலைவர் அசாதுதீன் ஓவைசி டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஓவைசிக்கு எந்தக் காயங்களும் ஏற்படவில்லை.

இந்தத் தாக்குதல் குறித்து ஓவைசி கூறுகையில், “உத்தரப் பிரதேசத்தின் மேற்கில் உள்ள ஹப்பூரில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு டெல்லி திரும்பினேன். அப்போது, டெல்லி டோல் பிளாசா அருகே துப்பாக்கிச் சூடு நடந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

  • कुछ देर पहले छिजारसी टोल गेट पर मेरी गाड़ी पर गोलियाँ चलाई गयी। 4 राउंड फ़ायर हुए। 3-4 लोग थे, सब के सब भाग गए और हथियार वहीं छोड़ गए। मेरी गाड़ी पंक्चर हो गयी, लेकिन मैं दूसरी गाड़ी में बैठ कर वहाँ से निकल गया। हम सब महफ़ूज़ हैं। अलहमदु’लिलाह। pic.twitter.com/Q55qJbYRih

    — Asaduddin Owaisi (@asadowaisi) February 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் துப்பாக்கிச் சூடுக்கு ஆளான காரின் புகைப்படத்தையும் ஒவைசி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். உத்தரப் பிரதேச தேர்தலை முன்னிட்டு பிப்.10ஆம் தேதி மீரட்டில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : UP Assembly Election: புதுக் கூட்டணி அமைத்த அசாதுதீன் ஓவைசி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.