ETV Bharat / bharat

மணிப்பூர் கலவரம்; இன்று முதல் இணையதள சேவை மீண்டும் தொடக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 6:39 PM IST

Etv Bharat
Etv Bharat

Manipur Violence: மணிப்பூரில் கலவரம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபைல், இணைய சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர்: மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த மே 3ஆம் தேதி முதல் மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் மக்களிடத்தில் தவறான செய்திகள், பிரச்சாரம் ஆகியவற்றை பரப்புவதை நிறுத்த மணிப்பூர் மாநிலத்தில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டது. தற்போது மாநிலத்தில் நிலைமை சீரடைந்துள்ளதால் மொபைல், இணைய சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக குடியேறியவர்களின் வருகையை அரசாங்கம் தொடர்ந்து கையாளும். மேலும், இந்தியா-மியான்மர் எல்லையில் முழுமையான வேலி அமைக்க வேண்டியதன் அவசியம் உள்ளது. மணிப்பூரில் உள்ள சர்வதேச எல்லையில் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு வேலி அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது” என கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சுதந்திர இயக்க ஆட்சியை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் எல்லையை சரியாக பாதுகாப்பதில்லை. உண்மையான பிரச்னைகளில் இருந்து திசை திருப்ப சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டனர். கடந்த 2 மாதங்களாக கலவரங்கள் குறைந்து சூழ்நிலைகள் மேம்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையால் மாநில இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது.

அதனை கட்டுப்படுத்த ‘war on drugs’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கலவரத்தால் மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல் மற்றும் பிற குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்டமாக சூரசந்த்பூர், கங்போக்பீ, மோரே, இம்பால் ஆகிய பகுதிகளில் மொபைல், இணையதள சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தீ சமூகத்துக்கு எதிராக கடந்த மே 3ஆம் தேதி கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 174 பேர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மணிப்பூர் மக்கள் தொகையில், 53 சதவீதம் பேர் மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நாகாஸ் மற்றும் குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 40 சதவீதம் பேர் வாழ்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனைகளுக்கு விசா வழங்க சீனா மறுப்பு! கிரண் ரிஜிஜூ கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.