ETV Bharat / bharat

கிராஃப் வடிவில் சூரிய கதிர்களை வெளியிட்ட இஸ்ரோ: ஆதித்யா எல்-1ன் அடுத்தடுத்த அப்டேட்ஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 10:46 PM IST

ஆதித்யா எல்-1 விண்கலம் மூலம் கடந்த அக்.29 ஆம் தேதி பதிவான சூரிய கதிர்களின் படத்தை கிராஃப் வடிவில் இஸ்ரோ தனது X-தளத்தில் பதிவிட்டுள்ளது.

கிராஃப் வடிவில் சூரிய கதிர்களை வெளியிட்ட இஸ்ரோ
கிராஃப் வடிவில் சூரிய கதிர்களை வெளியிட்ட இஸ்ரோ

புது தில்லி: சந்திரயான் - 3 ந் வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவியது. பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் திவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

  • Aditya-L1 Mission:
    HEL1OS captures first High-Energy X-ray glimpse of Solar Flares

    🔸During its first observation period from approximately 12:00 to 22:00 UT on October 29, 2023, the High Energy L1 Orbiting X-ray Spectrometer (HEL1OS) on board Aditya-L1 has recorded the… pic.twitter.com/X6R9zhdwM5

    — ISRO (@isro) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

புவியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூரியனின் ஆய்வுப்புள்ளியான லாக்ராஞ்சியன் புள்ளி-1 ஐ சென்றடைய 125 நாட்கள் பயணத்தை மேற்கொண்டு வருகிறது. லாக்ராஞ்சியன் புள்ளியை நோக்கிய பயணத்தில், புவியின் ஈர்ப்பு வட்டப்பாதையில் இருந்து வெளியேறி தற்போது அடுத்தக்கட்ட பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பயணத்தில், ஆதித்யா எல்-1 விண்கலத்தில் பொறுத்தப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரோமீட்டர் சூரிய அனலிலிருந்து வெளியேறும் X-ரேக்களின் புகைப்படத்தை முதல் முறையாக படமெடுத்துள்ளது. இது குறித்து இஸ்ரோ தனது X வலைதளத்தில், ஆதித்யா எல்-1-ன் முதல் ஆய்வுப் புகைப்படங்களை கிராஃப் வடிவில் பதிவிட்டுள்ளது. அதில்,

"HEL1OS X-ray Spectrometre: அதன் முதல் ஆய்வுக்காலமான கடந்த மாதம் 29ஆம் தேதி பதிவான புகைப்படத்தை கிராஃப் வடிவில் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. அந்தக் கதிர்கள் சூரிய சுற்றுப்பாதையில் பெரும் ஒளி நிறைந்தவையாக இருப்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. மேலும் அதில் இருந்து வெளிவரும் கதிர்கள் ரேடியோ, ஆப்டிகல், UV, மென்மையான எக்ஸ்-கதிர்கள், கடின எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா-கதிர்கள் போன்ற பல்வேறு மின்காந்த கதிர்வலைகளை மேம்படுத்துகிறது.

மேலும் பொறுத்தப்பட்டுள்ள HEL1OS X-ray கதிர்களின் ஆய்விற்காக பலப்படுத்தப்பட்டு வருகின்றன. பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் யு.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தின் விண்வெளி வானியல் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த HEL1OS சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் கன ஆற்றல்களின் வேகம் மற்றும் உயர் தெளிவுத்திறன் நிறமாலை குறித்து விளக்ககின்றது.

இது சூரிய ஆற்றலின் வெளியேற்றம் மற்றும் எலக்ட்ரான் முடுக்கங்கள் குறித்த ஆராய்சியாளர்கள் ஆய்வு மேற்கொள்ள பெருமளவில் உதவும். முன்னதாக கூறப்பட்டதுபடி, புவி ஈர்ப்பு பாதையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறி லாஞ்ரேஞ்சியன் புள்ளியின் நிலைநிறுத்தும் பயணத்திலேயே ஆய்வுப்பணிகளை தொடங்கியுள்ளது.

STEPS (Supra Thermal and Energetic Particle Spectrometre): அறிவியல் ஆய்வுப்பணிகளில் தீவரமாகிவரும் ஆதித்யா எல்-1ல் அமையப்பெற்றுள்ள மற்றொரு கருவியான STEPS- என்ற சென்ஸார் கருவியின் மூலம் பூமியில் இருந்து 50ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள ஆற்றல்மிக்க அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவீடு செய்ய துவங்கியுள்ளது. இந்த தரவுகள் பூமியைச் சுற்றியுள்ள அயனிகளின் பாதை குறித்து விவரிக்கும்." என இஸ்ரோ தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க: சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் : 5 மணி நிலவரப்படி 70.87% வாக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.