ETV Bharat / bharat

ஆற்றை நீந்திக் கடந்து போய் தேர்வெழுதிய மாணவி...!

author img

By

Published : Sep 10, 2022, 7:42 PM IST

ஆந்திரப் பிரதேசத்தில் ஓர் மாணவி படகு வசதி இல்லாததால் ஆற்றைத் தானே நீந்திக் கடந்து சென்று தேர்வெழுதிய சம்பவம் நடந்தேறியுள்ளது.

ஆற்றை நீந்திக் கடந்து போய் தேர்வெழுதிய மாணவி...!
ஆற்றை நீந்திக் கடந்து போய் தேர்வெழுதிய மாணவி...!

ஆந்திரப் பிரதேசம்(விஷாகப்பட்டணம்): திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது முன்னோர்களின் கூற்று. அதற்கு ஏற்றதாய் ஆந்திரப் பிரதேசத்தில் ஓர் மாணவி தன் கிராமத்திலிருந்து தேர்வெழுத ஆற்றில் நீந்தியே போய் தேர்வெழுதி வந்துள்ள சம்வம் நடந்தேறியுள்ளது. சம்பவதி நதியில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில், விஜயநகர மாவட்டத்திலுள்ள கஜபட்டிநகரம் மண்டல் ஊரைச் சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வெழுத விசாகப்பட்டிணம் போகவேண்டியிருந்துள்ளது.

ஆனால், மரிவலசாவிலிருந்து விசாகப்பட்டிணத்திற்கு செல்ல இடையே உள்ள சம்பவதி நதியைக் கடந்தாக வேண்டும். இந்நிலையில், தற்போது சம்பவதிந் அதியில் வெள்ளப் பெருக்கெடுத்து வருகிறது. மேலும், படகு வசதிகளும் அபாய எச்சரிக்கையினால் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், எப்படியாவது தேர்வெழுதியாக வேண்டுமென்ற எண்ணம் கொண்ட அந்த மாணவி நீந்தியே ஆற்றைக் கடக்க முடிவு செய்தார். அவருடன் சேர்த்து அவரது குடும்பத்தினரும் சேர்ந்து நீந்தி அற்றைக் கடந்து விசாகப்பட்டிணம் அடைந்து தங்கள் மகளை த் தேர்வெழுதச் செய்தனர்.

ஆற்றை நீந்திக் கடந்து போய் தேர்வெழுதிய மாணவி...!

இதையு படிங்க: ஒரு பூசணிக்காய் ரூ.4,7000-க்கு ஏலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.