ETV Bharat / bharat

நேபாளத்தில் நிலநடுக்கம்! 140 பேர் உயிரிழப்பு! டெல்லி, பீகாரில் உணரப்பட்ட நிலநடுக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 6:51 AM IST

Updated : Nov 4, 2023, 2:25 PM IST

நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 140 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Nepal
Nepal

காத்மண்டு : வடமேற்கு நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 140 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று (நவ. 3) நள்ளிரவு வடமேற்கு மாவட்டங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரிக்டர் அளவுகோளில் 5 புள்ளி 6 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், ஜாஜர்கட், ருக்கும் உள்ளிட்ட இடங்களில் கடுமையான சேத விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ருக்கும் உள்ளிட்ட பல்வேறு மலைப் பிரதேச மாவட்டங்களில் தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தகவல் கூறப்படுகிறது.

ருக்கும் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 35 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இடிந்து தரைமட்டமான கட்டிட சிதைவுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக மீட்பு படை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.

ஜாஜர்கோட் மாவட்டத்தில் 34 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிளைவுகள் குறித்த முழுத் தகவல்கள் வெளியிடப்படவில்லை. பல்வேறு இடங்களில் தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தனித் தீவுகளாய் நிவாரணத்திற்காக தவித்து வருகின்றனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்து உள்ளனர். வீதிகளில் தஞ்சமடைந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக மீட்பு குழு அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் டெல்லி, உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் கூறப்பட்டு உள்ளது. நில அதிர்வை தொடர்ந்து பல்வேறு தரப்பிலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்ததாக தகவல் கூறப்பட்டு உள்ளது.

நிலநடுக்கத்தால் அவதியடைந்து உள்ள நேபாளத்திற்கு அனைத்து விதமான உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். நிலநடுக்கத்தால் மக்கள் உயிரிழந்த செய்தி கேட்டு தான் மிகுந்த மனவேதனை அடைந்ததாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : ரேவ் பார்ட்டியில் பாம்பு விஷம் குடித்தாக பிக் பாஸ் வெற்றியாளர் மீது புகார்.. எல்விஷ் விளக்கம் என்ன?

Last Updated : Nov 4, 2023, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.