ETV Bharat / bharat

மணிப்பூர் விவகாரம் - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

author img

By

Published : Jul 28, 2023, 11:22 AM IST

Updated : Jul 28, 2023, 1:00 PM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் ஏழாம் நாளான இன்றும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

Parliament Monsoon Session Day seven
Parliament Monsoon Session Day seven

டெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய அரசிற்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட சலசலப்பு மற்றும் வார்த்தைப் போருக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்கால கூட்டத் தொடரின் ஏழாவது நாளில் இரு அவைகளும் மீண்டும் கூடிய நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

மணிப்பூர் நிலைமை குறித்து விவாதிக்க இரு அவைகளிலும் பட்டியலிடப்பட்ட நிரல்கள் அனைத்தும் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதில் எதிர்கட்சி கூட்டணி உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர். வடகிழக்கு மாநிலத்தில் நிலவும் விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கை வெளியிடவும், அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு மக்களவை சபாநாயகர் தேதியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று முன்வைக்க இருந்தனர். முன்னதாக காங்கிரஸ் மக்களவை எம்பி கௌரவ் கோகோய் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தாக்கல் செய்தார்.

மணிப்பூர் வன்முறை மீதான விவாதம் மறுக்கப்பட்டதாகவும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை ஒத்தி வைத்ததைக் கண்டித்தும், நேற்று (ஜூலை 2) எதிர்கட்சி உறுப்பினர்கள் கறுப்புச் சட்டையில் வந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

நேற்று மாநிலங்களவை துவங்கியதில் இருந்தே, அமளியிலே இருந்து வந்தது. 287 விதியின் கீழ் மணிப்பூர் குறித்த விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

​“வெளியுறவுக் கொள்கையில் சமீபத்திய முன்னேற்றங்கள்" என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் பல இடையூறுகளை எதிர்கொண்டார். இந்த கூச்சல், கோஷங்களுக்கு இடையே ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ‘மோடி மோடி’ என்று கோஷம் எழுப்பியதால், அவையில் பெரும் பரபரப்பு நிலவியது.

கருப்பு உடை அணிந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் நடத்திய அடையாளப் போராட்டம் குறித்து மாநிலங்களவையில் அவைத்தலைவர் பியூஷ் கோயல் கூறுகையில், ''கருப்பு உடை அணிந்து வரும் உறுப்பினர்களால் நாட்டின் அதிகாரமும், கவுரவமும் அதிகரித்து வருவதை புரிந்து கொள்ள முடியவில்லை.

இவ்வளவு தீவிரமான விஷயத்திலும் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது. இது இந்தியாவின் கவுரவப் பிரச்னை. உலகத்தின் முன் உருவான இந்தியாவின் பிம்பம். கறுப்பு உடை அணிந்தவர்களால் நாட்டில் அதிகரித்து வரும் சக்தியைப் புரிந்து கொள்ள முடியாது என நினைக்கிறேன். அவர்களின் நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் கருப்பு நிறத்தில் உள்ளன. ஆனால், அவர்களின் வாழ்விலும் ஒளி இருக்கும் என்று நம்புவதாக கோயல் தெரிவித்து உள்ளார்.

கூச்சல் காட்சிகளுக்கு மத்தியில் அவையை நண்பகல் 12 மணி வரை அவைத் தலைவர் ஒத்தி வைத்தார். பின் சபை மீண்டும் கூடியதும், அவைத் தலைவர், எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் கருத்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

மணிப்பூர் வன்முறை விவகாரம் தொடர்பாக வெளிநடப்பு செய்த எதிர்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில், 2023ஆம் ஆண்டு ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவை மதியம் 2 மணிக்கு மீண்டும் தொடங்கியது.

மக்களவையில், சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை எடுத்துக் கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் தொடர்பான கோரிக்கைகளை எழுப்பினர். எதிர்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் நேற்றைய முன்தினம் ஏற்றுக் கொண்டார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளின் முழக்கங்களுக்கு மத்தியில் ஜன விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, 2023 கூட்டுக் குழுவின் அறிக்கையின்படி, மக்களவையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இருப்பினும், இரு அவைகளும் பின்னர் நேற்றைய நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

இதையும் படிங்க: நம்பிக்கையில்லா தீர்மானம்: மோடி அரசுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்!

Last Updated : Jul 28, 2023, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.