ETV Bharat / bharat

சிறையில் மோதல்: பாடகர் மூஸ்வாலா கொலையில் கைதான 2 கைதிகள் உயிரிழப்பு

author img

By

Published : Feb 26, 2023, 10:02 PM IST

பஞ்சாபில் கைதிகள் இடையே சிறையில் ஏற்பட்ட தகராறில், பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகள் உயிரிழந்தனர்.

2  கைதிகள் உயிரிழப்பு
2 கைதிகள் உயிரிழப்பு

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் மானசா பகுதியை சேர்ந்தவர் பாடகர் சித்து மூஸ்வாலா. கடந்த ஆண்டு மே மாதம் 29ம் தேதி காரில் சென்று கொண்டிருந்த போது, கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மந்தீப் சிங், மன்மோகன் சிங் ஆகியோர் கோயிந்த் வால் சாகேப் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (பிப்.26) காலை சிறைக் கைதிகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவொருக்கு ஒருவர் பாத்திரம் மற்றும் இரும்புக் கம்பிகளால் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த மந்தீப் சிங், மன்மோகன் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து சடலங்களை மீட்ட போலீசார், உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தாக்குதலில் காயம் அடைந்த மற்றொரு கைதி கேசவ், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 கைதிகள் மீதும் கொலை வழக்குகளை தவிர, பிற வழக்குகளும் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு மிகுந்த சிறை வளாகத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நடனமாடிய இளைஞர் மாரடைப்பால் மரணம்.. 19 வயதில் நடந்த சோகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.