ETV Bharat / state

சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த சிறுவன்: புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என தாயார் கண்ணீர் மல்க புகார்

குளிப்பதை வீடியோ எடுத்ததாக அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 21, 2026 at 4:49 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தேனி: 9 ஆம் வகுப்பு சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த சிறுவன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், சிறுமியின் தாய் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு பயிலும் சிறுமி குளிப்பதை நேற்று அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை சிறுமியின் குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து, அந்த சிறுவனை பிடித்து செல்போனை வாங்கி பார்த்தபோது, அவன் பல நாட்களாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சிறுவனை பிடித்து வைத்து, அவரின் குடும்பத்தினரிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர்.

சிறுமியின் தாயார் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இதனால் இரு குடும்பத்தினரிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையை சிறுவனின் குடும்பத்தினர் தாக்கியதாகவும், அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் குடும்பத்தினர் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். இருப்பினும், இதுவரை அந்த புகாரின் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் அழைப்பு

இந்நிலையில், சிறுவன் மீதும், தட்டிக்கேட்டதற்காக தாக்குதல் நடத்திய அவரது குடும்பத்தினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, பலமுறை உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக சிறுமியின் தாயார் தெரிவித்தார்.