ETV Bharat / snippets

கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்! - KV Kuppam Goat Market

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 11:37 AM IST

கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தை
கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தை (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் வாரம்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், நெல்லுார் கிடா ஆடுகள் உட்பட 300க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன.

இதில் பெரிய ரக ஆடுகள் 16,000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும், சிறிய ரக ஆடுகள் 7000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையும் விலைபோனது. இந்த வார ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்தும், வியாபாரமும் அதிக அளவில் இல்லை எனவும், கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.