ETV Bharat / snippets

கல்லூரி மாணவர் ஓட்டி வந்த கார் டயர் வெடித்து விபத்து.. நேப்பியர் பாலம் அருகே நிகழ்ந்த சோகம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 3:06 PM IST

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார் (credits-ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கல்யாணி என்பவர் தனது மகன் ரமணகரனுடன் திருவண்ணாமலைக்கு காரில் சென்று விட்டு இன்று அதிகாலை வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

இந்த காரை தனது மகனான ரமணஹரன்(19) ஓட்டி வந்தார். அப்போது சென்னை போர் நினைவு சின்னம் அருகே கார் வந்தபோது காரின் இடது பக்க முன் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த தடுப்பு கம்பியின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

அந்த வழியாக சென்றவர்கள் கார் கதவை உடைத்து கல்யாணியையும் அவரது மகன் ரமணகரனையும் லேசான காயங்களுடன் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.