Live: விழுப்புரம், கடலூர் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்... - lok sabha election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 7:37 PM IST

Updated : Apr 5, 2024, 8:05 PM IST

thumbnail

விழுப்புரம்: 18வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறார். அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று(ஏப்.5) விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் துரை ரவிக்குமார் மற்றும் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதை நேரலையில் காணலாம்.இந்த பிரச்சார கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கணேசன் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட திமுகவினர், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதையும் படிங்க: சிஎஸ்கே - கேகேஆர் போட்டிக்காக ரசிகர்களுக்குச் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்! - CSK VS KKR MATCH SPECIAL TRAINS

Last Updated : Apr 5, 2024, 8:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.