காரைக்குடியில் சிஎஸ்கே கிரிக்கெட் பயிற்சி முகாம்: இளம் வீரர்களுக்கு மைக் ஹசியின் அறிவுரை என்ன? - training camp initiated by Hussey

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 11:47 AM IST

thumbnail
கிரிக்கெட் பயிற்சி முகாமின் துவக்க விழா தொடர்பான வீடியோ (credits-ETV Bharat Tamil Nadu)

சிவகங்கை: அழகப்பா கல்வி நிறுவனங்களின் குழுமம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் கிரிக்கெட் பயிற்சி முகாமின் துவக்க விழா காரைக்குடி அழகப்பா அகடாமி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இரண்டு நகரங்களிலும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் 10 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாமின் துவக்க விழாவில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த பயிற்சி முகாமை இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற பேசிய அவர், "இந்த வலை பயிற்சி முகாமானது எதிர்காலத்தில் சிறந்த வீரர்களை உருவாக்குவதற்கு உண்டான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு இளைய தலைமுறையினர் தங்களது விளையாட்டுத் திறனை மென்மேலும் வளர்த்துக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த வீரர்களாக உருவெடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் அழகப்பா கல்வி நிறுவனங்களில் தலைவர் வைரவன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.