பக்தர்களுடன் குத்தாட்டம் போட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி! - SP Velumani dance viral video
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : May 22, 2024, 3:51 PM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-05-2024/640-480-21530972-thumbnail-16x9-bsfbf.jpg)
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, இன்று சக்தி கரகம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ சக்திமாரியம்மன் தேர் பவனி நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சக்தி மாரியம்மன் தேர் பவனியை துவக்கி வைத்தார். பின்னர், ஊர்மக்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடி ஊர்வலமாகச் சென்றனர்.
திருத்தேரானது, பி.கே.புதூர், கோவைபுதூர் பிரிவு உட்பட பாலக்காடு பிராதன சாலை வழியாக ஊர்வலமாகச் சென்றது. அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும், இந்த விழாவில் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், முளைப்பாரிகள் எடுத்தும், பூச்சட்டிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செய்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கு முன்னதாக நடைபெற்ற திருவிளக்கு பூஜையிலும் எஸ்.பி.வேலுமணி குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தார்.