களைகட்டிய ஆலந்துறை காமாட்சி கோயில் திருவிழா; அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்! - Alandurai Kamatchi temple festival

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 3:43 PM IST

thumbnail
ஆலந்துறை காமாட்சி கோயில் திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், ஆலந்துறையில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் 97வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நேற்று மாலை துவங்கி இரவு வரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

கிரேன் மூலம் தொங்கியபடி முதுகில் அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் பக்தர்கள் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் வந்து காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் ஜமாப், கேரளா செண்டை மேளம், கேரளா தையம் ஆட்டமும் நடைபெற்றது. இறுதி நாளான இன்று, மஞ்சள் நீராட்டு விழா இசை நிகழ்ச்சிகளுடன் காமாட்சி அம்மன் கோயில் திருவிழா நிறைவடைகிறது.  

ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும் காமாட்சி அம்மன் கோயில் திருவிழாவில் ஆலந்துறை மட்டுமல்லாமல், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். எனவே, பாதுகாப்பு கருதி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.