ETV Bharat / state

“தார்சாலை கூட வேண்டாம்.. முதல்ல பாதைக்கு ஏற்பாடு பண்ணுங்க” - வேலூர் இலட்சுமிபுரம் மக்கள் கோரிக்கை! - Lakshmipuram village way issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 7:33 PM IST

Pathless village issue: காட்பாடி அருகே உள்ள இலட்சுமிபுரம் கிராமத்தில் பாதை ஏற்படுத்தி தரக்கோரி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இலட்சுமிபுரத்தில் இருக்கும் ஒத்தையடி பாதை
இலட்சுமிபுரத்தில் இருக்கும் ஒத்தையடி பாதை (PHOTO CREDITS- ETV BHARAT TAMIL NADU)

சாலை வசதி கூட வேண்டாம் முதல்ல பாதை மட்டும் ஏற்பாடு பண்ணுங்க! எனக்கூறும் கிராம மக்கள்! (video credits- ETV BHARAT TAMIL NADU)

வேலூர்: காட்பாடி அருகே ஆந்திரா- தமிழ்நாடு மாநில எல்லையில் இலட்சுமிபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராம மக்கள், “எங்களுக்கு சாலை வசதி கூட வேண்டாம், பாதை மட்டும் அமைத்துக் கொடுங்கள்” என பரிதாபமான முறையில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பாதை இல்லாத ஊர்: இது குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், தங்கள் கிராமம் அமையப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றுவரை பாதை என்ற ஒன்றே அமைக்கப்படவில்லை என்கின்றனர். இதனால் இலட்சுமிபுரதிற்கு அருகில் இருக்கும் குருநாதபுரம் வழியாக தனிநபர் ஒருவரின் பட்டா நிலத்திற்கு மேல் வரும் ஒற்றையடி பாதையில்தான் பல ஆண்டுகளாக தங்கள் ஊருக்குள் வர பயணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

முடக்கப்பட்ட வழி: ஆனால், இப்போது திடீரென அந்த தனி நபரும் அவர் தேவைக்காக அந்த பாதையை மூடி விட்டார். எனவே, எங்கள் கிராமத்திற்குச் செல்ல வேறு பாதை எதுவும் இல்லாத நிலையில், இப்போது கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் சுற்றி மழை நீர் செல்லும் ஓடை வழியாக தங்கள் ஊருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவதியில் மக்கள்: மேலும், மழைக் காலங்களில் ஓடை வழி செல்லும் மழை நீரால் லட்சுமிபுரம் கிராமமே தனித்தீவு போல காட்சி அளிக்கிறது. இதனால் அவசர தேவைகளான பள்ளி, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருந்தாலும், 2 கிலோ மீட்டர் ஓடையை சுற்றியே கடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால், சைக்கிளில் ஓடையைக் கடந்து, பின் காப்புக்காட்டு பாதை வழியாக 8 கிலோ மீட்டர் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி முடித்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகள் காட்டுவழிப் பாதையில் வரும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, படிக்கும் பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டாவது லட்சுமிபுரம் கிராமத்திற்கென ஒரு பாதையை மாவட்ட நிர்வாகம் கூடிய விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர், இலட்சுமிபுரம் கிராம மக்கள்.

இதையும் படிங்க: கனமழையில் இடிந்து விழுந்த குடிநீர் தேக்கத்தொட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.