ETV Bharat / state

பார்முலா 4 கார் ரேஸ் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும் - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 1:25 PM IST

Formula 4 Car Race: சென்னை தீவுத்திடலைச் சுற்றி நடக்க இருந்த பார்முலா 4 கார் ரேஸ் மழை வெள்ளத்தால் ஒத்தி வைக்கப்பட்டது, தற்போது ஜூன் மாதத்திற்குப் பிறகு கார் ரேஸ் நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Formula 4 Car Race
பார்முலா 4 கார் ரேஸ்

சென்னை: கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் பிரமாண்டமாக நடக்கவிருந்த பார்முலா 4 கார் ரேஸ், பெரும் மழை வெள்ளம் காரணமாக நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னை தீவுத் திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கார் பந்தயம் நடத்த அரசு 40 கோடி ரூபாயை செலவு செய்வது தவறு.

சட்ட அனுமதின்றி இந்த பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த பந்தயம் காரணமாக அரசுக்கு எந்த பலனும், லாபமும் இல்லை என்பதால் இந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கபட்டது. இதையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று (பிப்.13) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கார் பந்தயம் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என அரசுத் தரப்பிற்கு கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மழை, வெள்ளம் காரணமாக கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டதாகவும், ஜூன் மாதத்திற்குப் பிறகு கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெற்றுள்ளதாகவும், ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும் எனவும், மருத்துவமனையும் அனுமதி அளித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமை (பிப்.16) பிறப்பிப்பதாக நீதிபதிகள் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நிலப் பிரச்னையில் இருத்தரப்பினரிடையே மோதல்.. தேனியில் தனியார் பள்ளி தாளார் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.