ETV Bharat / state

ட்ரை-சைக்கிள் மீது கார் மோதி விபத்து; சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு! - Thoothukudi Tricycle accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 3:41 PM IST

Car accident near thoothukudi: தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி பகுதியில் உள்ள கீழ சண்முகபுரம் கிராமத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சேதமடைந்த வாகனங்கள்
விபத்தில் சேதமடைந்த வாகனங்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: மூன்று சக்கர சைக்கிள் மூலம் தூத்துக்குடி மாவட்டம் கீழ சண்முகபுரம் கிராமத்திற்குச் சென்று இன்று (மே.26) காலை பழைய பேப்பர், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அட்டைகளை சேகரித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில், மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன்னர்.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கன் மகன் சிலம்பரசன் (35). இவர் மூன்று சக்கர சைக்கிளில், ஊர் ஊராகச் சென்று பழைய பேப்பர், அட்டை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றைச் சேகரித்து, அதனை தூத்துக்குடியில் உள்ள கடை ஒன்றில் விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் சிலம்பரசன், அவரது மனைவி தங்கம்மாள் (35) மட்டுமின்றி, தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி மாரியம்மாள் (60), முருகன் மகன் சதீஷ் (7) உள்ளிட்டோர் சிலம்பரசனுடைய மூன்று சக்கர சைக்கிளில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அமைந்துள்ள சூரங்குடியில் உள்ள கீழ சண்முகபுரம் கிராமத்தில் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அட்டைகளைச் சேகரித்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலையைக் கடந்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, இவர்கள் சென்ற மூன்று சக்கர வாகனம் மீது மோது விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சதீஷ், தங்கம்மாள், மாரியம்மாள் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சிலம்பரசன் காரில் வந்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் குலவேளையைச் சேர்ந்த செல்வராஜ் (55), அவரது மனைவி குமரி தங்கம் (49) மற்றும் காரை ஓட்டி வந்த அவரது மகன் ஜெனிட் (29) ஆகியோர் காயமடைந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, உயிரிழந்த மூவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வாக்கிங் சென்றவர் மீது பைக் மோதி விபத்து.. கேரளாவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி உயிரிழப்பு - COVAI ACCIDENT

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.