ETV Bharat / state

திமுக - விசிக இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி.. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 4:26 PM IST

DMK - VCK Alliance Meeting Cancel: திமுக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்டிருந்த திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவினர், அண்ணா அறிவாலயத்தில் காத்திருந்தனர்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் அசோக் நகரில் நடைபெற்று வந்தது. அந்த கூட்டத்திற்குப் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அண்ணா அறிவாலயம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென 12.10 மணிக்கு, திமுக பேச்சுவார்த்தை குழுவினர் அறிவாலயத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைக்காக இரண்டு முறை திமுக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று (மார்ச் 2) மூன்றாவது முறையாக அழைத்தும் அண்ணா அறிவாலயம் வருகை தராததால், திமுக - விடுதலை சிறுத்தைகள் இடையேயான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுந்திருக்கிறது.

ஏற்கனவே மதிமுக தரப்பில் திமுகவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன் தாயகத்தில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையிலும், மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவது என்பதில் உறுதியாக இருந்தது.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடனான உயர்மட்டக்குழு கூட்டம் அசோக் நகரில் நடைபெற்ற நிலையில், விசிக தரப்பில் இரண்டு தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், இந்த பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது என தகவல் வெளியாகி வருகிறது.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்: மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் செய்ததும்..! செய்யத் தவறியதும்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.